MailPrint
ஹாலிவுட்டில் மீண்டும் A GOOD DAY TO DIE HARD(டிரைலர் இணைப்பு)
[ Saturday, 09 February 2013, 05:47.10 AM GMT +05:30 ]
'LIFE OF PIE' என்கிற ஓர் அருமையான திரைக்காவியத்தை வழங்கிய FOX STAR STUDIOS நிறுவனத்தின் மிகப் பிரமாண்டமான அதிரடி ஆக்ஷன் படமிது.

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த 'DIE HARD' தொடர் பட வரிசையில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளன.

அந்நான்கு படங்களிலேயும் John Mcclane என்கிற காவல்துறை அதிகாரி வேடத்தில் தோன்றி நடித்த Bruce Willis, இதிலும் பிரதான பாகம் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு வித்தியாசம் இதில் என்னவென்றால், Bruce Willis தவிர அவரது மகன் கதாபாத்திரத்தில் Jai Courtney என்கிற நடிகரும் இணை சேர்ந்து ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார்.

தனது மகன், Jack ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி கேட்டு, மாஸ்கோ விரைகிறார் John. அங்கு சென்றடைந்தவுடன் தான் விடயத்தின் விபரீதத்தை John உணர்கிறார்.

Nuclear Weapons கடத்தலில் சிலர் ஈடுபட்டிருப்பதையும், அது தொடர்பாக புலனாய்வு செய்யும் CIA அதிகாரிதான் Jack என்பதும், Johnக்கு புலப்படுகிறது. இலக்கு ஒன்றாகிலும் வழித்தடங்கள் வெவ்வேறு ஆகியபடியால் Johnனும் Jackகும் தத்தம் பாதைகளில் பயணிக்கிறார்கள், தவறிழைப்பவர்களை தண்டிப்பதற்காக!..

படத்தை படு விறுவிறுப்பாக இயக்கியிருப்பவர், John Moore ஏறக்குறைய ஐந்து வில்லன்கள் படத்தில் வலம் வருகிறார்கள்.

Jonathan Sela படத்தின் ஒளிப்பதிவாளர். வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, நியூயார்க், புத்தபேஸ்ட் ஹங்கேரி போன்ற இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது.