MailPrint
அவுஸ்திரேலியாவில் சூதாடிய அமலாபால்
[ Sunday, 07 April 2013, 06:57.03 AM GMT +05:30 ]
ஏ.எல் விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அமலாபால்.

இவர் படப்பிடிப்பில் எந்நேரமும் ஒரே அரட்டை அமர்க்களம்தானாம்.

ஒரு சிறிய இடைவேளை கிடைத்தாலும், கூட்டணியாக சிலரை சேர்த்துக்கொண்டு சீட்டாட்டத்தை தொடங்கி விடுகிறார்.

அப்படி பழகிய பழக்கம், சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு அவுஸ்திரேலியாவில் நடந்தபோதும் தொடர்ந்திருக்கிறது.

அங்கு படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது சக நண்பர்களுடன் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிய அமலாபால், அங்கு கண்ணில் தென்பட்ட ஒரு சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து விட்டார்.

அங்கு உள்ளூர்வாசி மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட்டம் கூட்டமாக சூதாட்டம் விளையாடியுள்ளனர். அமலாபால் சூதாட்ட களத்தில் இறங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தை இழந்துள்ளார். பின்னர் நடிகர் சுரேஷ் உடன் சேர்ந்து கொண்டு சூதாட்டம் ஆடி கொஞ்சம் பணமும் சம்பாதித்தார்.

இது குறித்து நடிகை அமலாபால் கூறுகையில், சூதாட்டத்தில் எனக்கு லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.