MailPrint
“உ” படத்தலைப்பு பிரச்சினை தீர்ந்தது: இயக்குனர் ஆஷிஸ்
[ Sunday, 07 April 2013, 08:38.15 AM GMT +05:30 ]
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் உ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் திடீரென உருவான படத்தலைப்பு பிரச்சினை தீர்ந்தது என்றார் இயக்குனர் ஆஷிக்.

இது குறித்து அவர் கூறுகையில், படத் தலைப்புகள் பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளின் படி, தங்கள் அமைப்பில் பதிவு செய்யப்படும் தலைப்புகளுக்கான முறையான அறிவிப்பை மற்ற அமைப்புகளுக்கு அனுப்புகிறார்கள்.

15 நாட்களுக்குள் மற்ற இரு அமைப்புகளும் அந்த தலைப்பு அவர்களிடம் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்த நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்படுகிறது.

ஒரு படத் தலைப்பை பதிவு செய்த பின்னர் உறுதி செய்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள்.

அப்படி நாங்கள் 2012ம் ஆண்டு, யூன் மாதம் 30ம் திகதி (30.06.2012) கில்டில் உ தலைப்பை பதிவு செய்தோம்.

கில்டில் இருந்து முறையாக மற்ற இரு அமைப்புகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து எந்த மறுப்பும் வராத நிலையில் ஒரு மாதம் கழித்து யூலை மாதம் 31ம் திகதி (31.07.2012) உ தலைப்பை எங்களுக்கு வழங்கினார்கள்.

உ படத்தலைப்பு சம்பந்தமாக எந்த அமைப்புகளிடமும் இருந்தும் இதுவரை எங்களுக்கும் எந்த மறுப்பும் வரவில்லை.

எனவே உ தலைப்பு உங்களுக்கு உரிமையானது என்று மறுபடியும் உறுதி செய்துள்ளனர் என்றும் "உ" தலைப்பை 29.06.2013 வரை பயன்படுத்திக்கொள்ளும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது எனவும் கூறினார்.

நடிகர்கள்:

தம்பி ராமையா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டம் வென்ற ஆஜீத், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, தீப்ஸ், உ,சத்யா,வருண், நேகா, ராஜ்கமல், காளி, சக்கரவர்த்தி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, வெங்கி, யோகி தேவராஜ், பேபி மதுமிதா மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

இசை: அபிஜித் ராமசுவாமி
ஒளிப்பதிவு: ஜெயப்பிரகாஷ்
படத்தொகுப்பு: கமல்ஜி
பாடல்கள்: முருகன் மந்திரம்
எழுத்து & இயக்கம்: ஆஷிக்
நிர்வாகத் தயாரிப்பு: முருகன் மந்திரம்
தயாரிப்பு: நந்தகுமார், ப.ராமசுவாமி, அசோக்குமார்