MailPrint
வடிவேல் மகளுக்கு ரகசிய திருமணம்
[ Sunday, 07 April 2013, 02:26.34 PM GMT +05:30 ]
நடிகர் வடிவேலு, தனது மகள் திருமணத்தை இன்று மதுரையில் மிகவும் ரகசியமான முறையில் நடத்தினார்.

'கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மூத்த மகளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

திருமணத்திற்கான அழைப்பிதழை வடிவேலு பலருக்கும் கொடுத்திருந்தாலும் கூட மிகவும் சிலர் தான் வந்திருந்தனர்.

காரணம் வடிவேலுவே அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வர வேண்டாம் என கூறியிருந்ததால் என்று சொல்கிறார்கள்.

முன்னணி கொமெடியனாக இருந்த வடிவேலு விஜயகாந்தை எதிர்ப்பதற்காக அரசியலில் இறங்கி பிரச்சாரம் செய்ததன் விளைவு தான் இந்த அமைதிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.