MailPrint
அதிரடி கவர்ச்சி நாயகியாக உருவெடுக்கும் தன்ஷிகா
[ Wednesday, 03 April 2013, 06:30.53 AM GMT +05:30 ]
இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்த தன்ஷிகா, இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பரதேசி படத்தில் நடித்தது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கவே தன்னை அழைப்பார்களோ? என்ற அச்சத்தில் இருந்தார்.

ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. கமிட்டான, யா யா, விழித்திடு, சங்குதேவன் ஆகிய மூன்று படங்களிலுமே இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் நடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

அதோடு, இந்த படங்களில் கதாநாயகனாக வளர்ந்து நடிகர்களான சிவா, விதார்த், விஜயசேதுபதி ஆவர்.

ஆதலால் இப்படங்கள் மூலம் தன் மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் தன்ஷிகா.

அதன் காரணமாக, இப்படங்களில், கவர்ச்சி விடயத்தில் தாராளம் காட்டவும் திட்டமிட்டு, அதிரடி கவர்ச்சி நாயகியாக உருவெடுக்கப்போகிறாராம் தன்ஷிகா.