MailPrint
பாலாஜி கோவிலை 108 முறை சுற்றிய ஸ்ருதி ஹாசன்
[ Wednesday, 03 April 2013, 07:17.25 AM GMT +05:30 ]
ஐதராபாத் அருகே உள்ள, சில்கூர் என்ற கிராமத்தில் மிக பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, பாலாஜி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து, மனம் உருகி வேண்டி 108 முறை கோவிலை சுற்றினால் வேண்டியது பலிக்கும் என்பது நம்பிக்கை.

இதனால், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இக்கோவிலுக்குத் தான் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் சென்று மனம் உருக வேண்டியது மட்டுமல்லாமல், கோவிலை 108 முறை சுற்றி வந்தாராம்.

ஸ்ருதியின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டோலிவுட் வட்டாரங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனராம்.