MailPrint
உற்சாகத்தில் ஐஸ்வர்யா தனுஷ்
[ Saturday, 30 June 2012, 03:23.18 PM GMT +05:30 ]
தனுஷின் நடிப்பில் உருவான “3” படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்து குழந்தைகளை மையமாக வைத்து படமொன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் படம் 3ன் பாடல்கள் வெற்றி பெற்றாலும், அந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பில்லை.

ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது கிடைத்தது. அத்துடன் அமெரிக்காவில் பாராட்டு விழாவும் நடந்தது.

இதுமட்டுமல்லாமல் அடுத்த மாதம் ஜேர்மனியில் நடைபெற ஒன்பதாவது இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, 3 படத்தை இயக்கியதற்காக “டைரக்டர்ஸ் விஷன் அவார்ட்” பெறுகிறார்.

மேலும் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் இருவரின் நடிப்பில் இயக்குனர் செந்தில் இயக்கும் படத்தை தயாரிப்பதில் ஐஸ்வர்யா மும்முரமாக இறங்க உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் உற்சாகத்துடன் மீண்டும் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா.

இந்த முறை அவர் குழந்தைகளுக்கான படத்தை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது, இன்னொரு படத்துக்கான கதையையும் தயார் செய்துள்ளாராம்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்க போகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.

இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.