MailPrint
கவுதம் மேனனை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை
[ Thursday, 18 April 2013, 12:36.30 PM GMT +05:30 ]
இயக்குனர் கவுதம்மேனனுக்கு எதிராக ஆர்.எஸ்.இன்பொடெய்ன்மென்ட் பட நிறுவன உரிமையாளர் ஜெயராமன் கடந்த 3ம் திகதி புகார் அளித்தார்.

அந்த மனுவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை இந்தி மொழியில் ‘ஏக்திவானா தா’ என்ற பெயரில் ரீமேக் செய்ய பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் போட்டோன் கம்பெனியும் ஒப்பந்தம் செய்தன.

போட்டோன் நிறுவன பங்குதாரராக இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன் உள்ளார். இந்தியில் ரூ.13.58 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ரூ.1.98 கோடி முதலீடு செய்திருந்தேன்.

ஆனால் இந்த படத்தின் மூலம் எந்த லாபத்தையும் எனக்கு தராமல் கவுதம் மேனனும் பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் என்னை ஏமாற்றி விட்டன என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது தான் கைதாகலாம் என்று கவுதம்மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சுப்பையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா இயக்குனர் கவுதம்மேனனை வருகிற 26ம் திகதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளார்.

மேலும் பொலிஸ் விசாரணைக்கு கவுதம்மேனன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.