MailPrint
நண்பர்களை பிரிக்கும் மும்பை மொடல் அழகி
[ Friday, 16 August 2013, 12:01.08 PM GMT +05:30 ]
கொலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் மும்பை மொடல் அழகி நீலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அர்ஜூன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் நடிக்கும் படம் உன்னோடு ஒரு நாள்.

இப்படத்தில் கதாநாயகியாக மும்பை மொடல் அழகி நீலம் அறிமுகமாகிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறுகையில், உயிருக்கு உயிராக பழகும் இரு நண்பர்களுக்கு இடையே இளம்பெண் குறுக்கிடுகிறாள்.

அவளை நண்பன் ஒருவன் காதலிக்க, அவளோ இன்னொரு நண்பனை காதலிக்கிறாள்.

காதலில் தோல்வி அடைந்த நண்பன் வெளிநாட்டுக்கு செல்லும் நேரத்தில், இளம்பெண்ணுக்கும்- காதலனுக்கும் திருமணம் நடக்கிறது.

வெளிநாடு சென்றவன் திரும்பி வந்ததும், நண்பனின் மனைவியாகிவிட்ட பழைய காதலியை மீண்டும் காதலிக்க முயல்கிறான்.

இதன் பின்பு நடக்கும் காட்சிகள் திடுக்கிடும் வகையில் அமைகிறது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் 50 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் படம் வெளியாகுமென தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு: விஜயராஜ்.
இசை: சிவபிரகாசம்.
பாடல்கள்: மாலதி, ருத்ரா.
இயக்கம்: துரை கார்த்திகேயன்.
தயாரிப்பாளர்: அருண்மொழி மாணிக்கம்.