MailPrint
நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன்: மனம் கொத்தி பறவை நாயகி
[ Thursday, 24 May 2012, 07:04.22 AM GMT +05:30 ]
கொலிவுட்டில் இயக்குனர் எழில் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை' படத்தில் கேரளக்கிளி ஆத்மியா நடித்துள்ளார்.

நாயகன் சிவகார்த்திகேயனுடன் காதல் காட்சிகளில் ஆத்மியா இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஆத்மியா, நான் இந்த காதல் கலந்த நகைச்சுவை படத்தில் கிராமத்து இளம் நாயகியாக நடித்துள்ளேன்.

கிராமத்து பணக்கார பெண் கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன்.

சின்ன வயதிலிருந்தே பழகி வரும் இருவரின் காதல் கதையை இதில் சொல்லியிருக்கிறார்கள்.

நான் அறிமுகமான 'மனம் கொத்தி பறவை' படம் வெளியான பிறகு, நல்ல கதைகளில் எனக்கு பிடித்த கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று ஆத்மியா கூறியுள்ளார்.