MailPrint
சிங்கப்பூரில் மாற்றான் இசை
[ Saturday, 28 July 2012, 02:08.10 PM GMT +05:30 ]
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தின் இசை, சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்க, சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இணைந்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது திரையுலகில் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள்.

ஓகஸ்ட் 9-ம் திகதி இந்த விழா நடக்கிறது. இவ்விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள், படக்குழுவினர் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

மாற்றான் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.