MailPrint
கிரிஷ்ஷை நெகிழ வைத்த அஜித்
[ Tuesday, 18 September 2012, 01:20.59 PM GMT +05:30 ]
பிரபல பாடகரான கிரிஷ் அடியே கொல்லுதே, ஒரு சின்ன தாமரை, என் பிரண்ட போல யாரு மச்சான் உட்பட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இவர் நடிகை சங்கீதாவின் கணவர் ஆவார். கிரிஷ் சமீபத்தில் மலேசியா சென்றிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கிரிஷ் கூறுகையில், நான் மலேசியாவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

இதனை கேட்டதும் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.

இந்த விஷயத்தை டுவிட்டரில் நான் வெளியிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள் யாரும் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரிக்கவில்லை.

இதனால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இயக்குனர் வெங்கட்பிரபு செல்போனில் மெசேஜ் அனுப்பி விசாரித்தார்.

நடிகர் அஜித் செல்போனில் நேரடியாக பேசி நலம் விசாரித்தார். அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை.

என் வீட்டுக்கு போன் செய்து நம்பரை வாங்கி, என்னிடம் விமான கோளாறு பற்றி கேட்டு அறிந்து நலம் விசாரித்தார்.

அவர் செயல் என்னை நெகிழ வைத்தது. ஆயுள் உள்ளவரை அஜித்தை மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.