MailPrint
நானும் ஒரு காலத்தில் காதலித்திருக்கிறேன்: ஆண்ட்ரியா
[ Monday, 21 January 2013, 11:29.08 AM GMT +05:30 ]
விஸ்வரூபம் படத்தின் நாயகியான ஆண்ட்ரியா தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொலிவுட்டில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நடித்த ஆண்ட்ரியா தற்போது கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து மலையாளத்தில் அன்னாயும் ரசூலும் என்ற படத்தில் அறிமுகமாகிறார். விரைவில் தெலுங்கிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

முதன்முறையாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆண்டிரியாவுக்கு மலையாளத்தில் டப்பிங் பேசுவது கடினமாக இருக்கிறதாம்.

தன்னைக் குறித்து கருத்து தெரிவிக்கையில், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் விரிவாக திட்டமிடும் வாய்ப்பு என் கையில் இருந்தது தற்போது மாறிவிட்டது.

எதையும் தேடிக்கொண்டு செல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது. திருமணத்தைப் பொருத்தவரை ‘லவ்’வின் அடுத்த பரிமாணம் என்று கருதுகிறேன். நானும் ஒரு காலத்தில் காதலித்திருக்கிறேன்.

தனக்கு எது சரியாகப்படுகிறதோ அதை தெரிவு செய்வேன் என்றும் தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.