MailPrint
ஆர்யாவை தோற்கடித்த நஸ்ரியா
[ Tuesday, 27 August 2013, 07:37.12 AM GMT +05:30 ]
ஆர்யாவை தனது வாய் சண்டையால் தோற்கடித்துவிட்டாராம் நடிகை நஸ்ரியா நசீம்.

கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளில், அசினை தவிர, மற்ற நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாகவே இருப்பார்கள்.

ஆனால், இப்போது நஸ்ரியா நசீமும், அசின் பட்டியலில் இடம் பிடித்துள்ளாராம்.

தற்போது "நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து வரும் அவர், படப்பிடிப்பு நடந்தபோது எந்நேரமும் வாய் பேசிக் கொண்டே இருந்ததாக, அவருடன் நடித்தவர்கள் சரமாரியாக புகார் கூறியுள்ளனர்.

அதிலும், கலாய்ப்பு மன்னன் ஆர்யாவுக்கு எதிராக பதிலுக்கு பதில் பேசி சில நேரங்களில் அவரது வாயையே அடைத்து விட்டார் நஸ்ரியா.

இதனால், முதன்முறையாக ஒரு நடிகையுடன் வாய் சண்டையில் தோற்று நின்றாராம் ஆர்யா.