MailPrint
ரகளபுரத்தில் இணைந்த முமைத்கானின் சகோதரி
[ Sunday, 19 August 2012, 11:00.50 AM GMT +05:30 ]
கொலிவுட்டில் கென் மீடியா பட நிறுவனம் சார்பாக கருணாஸ் தயாரித்து நடிக்கும் படம் ரகளபுரம்.

முழுநீள கொமெடி படமாக உருவாகி வருகின்ற இப்படத்தில் கருணாஸ் நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக அங்கனா ராய் நடிக்கிறார். படத்தின் மிக முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார்.

இவர்களுடன் சிங்கம் புலி, எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, டெல்லி கணேஷ், மனோபாலா, ஷகிலா, மயில்சாமி, OAK. சுந்தர், வையாபுரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்றிற்காக முமைத்கானின் சகோதரி சபீனா கான், ஏக்தா திரிவேதி ஆகியோர் நடிக்கின்றார்கள்.

வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கின்றார். படத்திற்கான திரைக்கதை, வசனம், இயக்கம் பொறுப்புகளை மனோ ஏற்றிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ரகளபுரம் படம் அனைவரையும் இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்கும்.

ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி இருக்கிறோம். கருணாஸ் பொலிஸாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிரிப்பதற்கான காட்சிகளை வைத்திருக்கிறோம் என்றார் மனோ. கருணாஸ் மகன் கென் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.