MailPrint
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் வரும் உண்மை சம்பவம்
[ Monday, 16 July 2012, 03:59.29 AM GMT +05:30 ]
லியோ விஷன் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தை எடுத்திருப்பதாக இயக்குனர் பாலாஜி தரணி தரன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் மூன்று புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.

ரேணிகுண்டா இயக்குனரின் ''18 வயசு'' படத்தில் நடித்த பெங்களூரு காயத்ரி இதில் நாயகியாக வருகிறார்.

நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளேன்.

நானும் ஒளிப்பதிவாளரும் படத்தில் நடித்துள்ளோம். மற்றுமொருவர் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் நடிகர்களுக்கு 'வசனத்தை' சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

ஏனென்றால் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் 'வசனத்தை' விரல் நுனியில் வைத்திருந்தார்கள். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே காட்சிக்கு தகுந்த அளவில் தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள்.

படத்தின் 'ப்ரீ-புரடக்சன்' மட்டுமே ஒரு வருடம் போனது. திரைக்கதை, ரிகர்ஸல் என ஓவ்வொன்றுக்கும் உழைத்துள்ளோம் என்கிறார் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' பட இயக்குனர் பாலாஜி தரணிதரன்.