MailPrint
சிங்கத்துடன் இணையும் சீயான்
[ Saturday, 21 September 2013, 02:52.49 PM GMT +05:30 ]
ஹரி இயக்கத்தில் விரைவில் ஒரு படம் நடிக்கப்போகிறாராம் சீயான் விக்ரம்.

அடுத்தடுத்து வெளிவந்த விக்ரமின் தாண்டவம், ராஜபாட்டை, டேவிட் போன்ற படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அதனால் ரசிகர்ளுக்கு தீனி போடும் விதமாக தற்போது ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ஐ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக ஆங்கில தேவதை எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படம் 17 மொழிகளில் அடுத்தாண்டு வெளிவரவுள்ளது.

இதனைத் தவிர்த்து சீயானின் நெருங்கிய நண்பரான தரணி இயக்கத்தில் ராஸ்கல் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது மீண்டும் சாமி, அருள் படத்திற்கு பிறகு ஹரியுடன் கூட்டணி சேரவுள்ளார் விக்ரம்.