MailPrint
புது அவதாரத்தில் கலக்கும் ஒவியா
[ Sunday, 22 September 2013, 05:54.21 AM GMT +05:30 ]
நடிகையாக மட்டுமல்ல டப்பிங் பேசியும் கலக்கி வருகிறார் ஒவியா.

கேரளத்து வரவான இவர் களவானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தற்போது இவர் நடித்த மூடர்கூடம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரின் தயாரிப்பான மதயானைக்கூட்டம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஓவியா ஒரு மலையாளி மியூசிக் ஸ்டூடன்டாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

இதில் ஓவியாவின் கதாபாத்திரம் தமிழும், மலையாளமும் கலந்து பேசக்கூடிய மாதிரி அமைந்திருப்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு மலையாளியான ஓவியாவே குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த படக்குழுவினர் அவரையே டப்பிங் பேச வைத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு முதன் முதலாக டப்பிங் பேசியிருப்பது வித்தியாசமான ஒரு அனுபவம் என்று சொன்ன ஓவியா, வாய்ப்பு கொடுத்தால் இனி வரும் படங்களிலும் டப்பிங் பேச தயாரா இருக்கேன் என்றும் கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் மதயானைக்கூட்டம் படம் மூலம் டப்பிங் கலைஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் ஓவியா.