MailPrint
மோதிரம் அணிந்தால் காதலிப்பதாக அர்த்தமா? ராகினி
[ Monday, 12 November 2012, 02:34.31 AM GMT +05:30 ]
மோதிரம் அணிந்தால் காதலிப்பதாக அர்த்தமா? எந்த நடிகரையும் காதலிக்கவில்லை என்றார் ராகினி.

கொலிவுட், பாலிவுட்டில் கதாநாயகன், கதாநாயகிகள் பற்றி காதல் கிசுகிசு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த டிரெண்ட் சாண்டல்வுட்டிலும் பரவிவிட்டது.

நடிகை ராகினியும், யோகியும் “பங்காரி” என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டது.

அப்போது ராகினிக்கு யோகி மோதிரம் அணிவித்தார் என்று பத்திரிகைகளில் தகவல் வெளியானது. சமீபகாலமாக ராகினி விரலில் மோதிரம் பளபளப்பதால் அதுபற்றி இண்டஸ்ரியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ராகினி கூறும் போது, இது யாரோ ஒருவர் கற்பனையில் கட்டிவிட்ட கதை. யோகியும் நானும் நண்பர்களே தவிர எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. பங்காரி படத்தில் நாங்கள் ஜோடியாக நடிக்கிறோம் அவ்வளவுதான்.

கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லோருக்கும் ஒரு அறிவுரை சொல்கிறேன். யாரும் நகை அணியாதீர்கள். குறிப்பாக விரலில் மோதிரம் போடாதீர்கள்.

அப்படி போட்டால் உடனே நீங்கள் காதலிப்பதாக எழுதி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே நடிகர் யோகியும், ராகினியுடன் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார்.