MailPrint
டிரைவரை தாக்கி நாயகி நிகிஷா படேலை சூழ்ந்த ரசிகர்கள்
[ Friday, 19 April 2013, 06:35.30 AM GMT +05:30 ]
புளு ஒசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. சித்திரைச் செல்வன் தயாரிப்பில், ரமேஷ் செல்வன் இயக்கும் படம் தலைவன்.

இந்தப் படத்தில் புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் நிகிஷா படேல் நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தானம், ஜெயப்பிரகாஷ், சுமன், கோட்டா சீனிவசான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழா என்கிற இடத்தில் நடைபெற்றது. கேரளாவில் நீர் சூழ்ந்துள்ள பகுதியான பள்ள துருத்தி என்கிற இடத்தில் பாடல் காட்சி படமானது.

இறுதிப் படப்பிடிப்பு நடைபெற்றக் கொண்டிருந்தபோது கதநாயகி நிகிஷா படேல் நடித்த காட்சிகள் முடிவடைந்ததால், அவர் அங்கிருந்து கொச்சின் சென்று இன்டிகோ விமானம் முலம் மும்பை செல்ல இருந்தார்.

கதாநாயகி நிகிஷா செல்கிறார் என்று தெரிந்தும், ரசிகர்கள் அவறை சூழ்ந்து கொண்டு தள்ளியதால், அவர் சிலருக்கு மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு, அங்கிருந்து விலகி செல்ல முயன்றார்.

ஆனால் அவர்களை அவரால் கடந்து செல்ல முடியவில்லை.இதனால் காரின் ஓட்டுனர் கே.எஸ். குட்டன் அவர்களை முறைப்படுத்த முயன்றார்.

இதனால் ஓட்டுனருக்கும், ரசிகர்களுக்கும் மோதல் எற்ப்பட்டது. ரசிகர்கள் ஓட்டுனரை அடித்து உதைத்ததனால் அந்த இடம் பதற்றமானது.

இதனை அறிந்தும் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன், இயக்குநர் ரமேஷ் செல்வன், மேனேஜர் ஆகியோர் அங்கு சென்று சமாதனப்படுத்தினர்.

பின்பு நிகிஷாபடேலை காரில் அனுப்பிவைத்தனர் அதற்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

hits